• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பலாலி விமான நிலையம் குறித்து யாழில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

Jan. 16, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

இன்று (16) காலை சாவகச்சேரி, மீசாலையில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை‘ தேசிய வீட்டுத் திட்டம் 2026” அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகோண்ட போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, முதல் முறையாக யாழ்ப்பாண மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு அரசாங்கம் இன்று நாட்டில் உருவாகி இருக்கின்றது, அந்த நம்பிக்கை ஒரு துளி கூட மீற இடமளிக்கப்பட மாட்டாது, உள்ளங்களை ஒன்றிணைத்து, பிள்ளைகளுக்காக மோதலற்ற, ஒற்றுமையுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்க அனைவரும்  ஒன்றிணையுங்கள்..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.