• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தைப்பூச திருநாளில் திருமஞ்சத்தில் காட்சி தந்த நல்லூரான்

Feb. 2, 2026

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருநாள் சிறப்பு வழிபாடுகள் நேற்று (01) மிக சிறப்பாக நடைபெற்றது.

மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, வள்ளி தெய்வானை சமேதரராய் வேல் பெருமான் திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெரும்பாலானவர்கள் மஞ்ச திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இதே வேளை இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம்  நடைபெற்றது

தைப்பூச திருநாளில் திருமஞ்சத்தில் அருட்காட்சி தந்த நல்லூரான் | Nallur Kovil Thail Pusam Festival
தைப்பூச திருநாளில் திருமஞ்சத்தில் அருட்காட்சி தந்த நல்லூரான் | Nallur Kovil Thail Pusam Festival
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.