• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலக சந்தையில் தொடர்ந்தும் உச்சத்தில் தங்க விலை 

Feb. 26, 2026

உலக சந்தையில் இன்றைய தினம் (26.02.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை, 5158 டொலராக காணப்படுகிறது.தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலையானது ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை கடந்திருந்தது. 

அதேநேரம் கடந்த ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை 52.44 சதவீதத்தால் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.அத்துடன், வெள்ளியின் விலையும் அதிகரித்து, 88 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.