• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது தாக்குதல்

März 4, 2026

இலங்கையின் கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளானதாக கருதப்பட்ட ஈரானியக் போர் கப்பல் நீர் மூழ்கி கப்பல் ஒன்றால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 101 பேர் காணாவில்லை என்றும், 78 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இலங்கை அரசை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் இலங்கை கடற்படை குறித்த தகவலை முற்றாக நிராகரித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.