• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் மீட்கப்பட்ட சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள்!

März 13, 2026

யாழில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் நேற்றையதினம்(12) சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2 கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டன.

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.