• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விழுந்து நொருங்கிய அமெரிக்காவின் பாரிய இராணுவ விமானம்

März 13, 2026

ஈராகில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் KC-135 எரிபொருள் நிரப்பும் (refuelling) ராணுவ விமானம், இரண்டு விமானங்கள் தொடர்புடைய ஒரு சம்பவம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் எதிரி தாக்குதல் அல்லது தவறுதலான தாக்குதல் காரணமாக ஏற்பட்டதல்ல என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ஈராகின் மேற்கு பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

விழுந்து நொருங்கியது அமெரிக்காவின் பாரிய இராணுவ விமானம்! | Us Kc 135 Military Refueling Plane Crashes
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.