• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விவசாயிகளுக்கு உர மானியம்! வெளியாகியுள்ள தகவல்

Juni 21, 2026

சிறுபோகத்திற்கான உர மானியம் 90 வீதமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள விவசாயிகளுக்கும் கூடிய விரைவில் இந்த உர மானியம் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

ரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த உர மானியத் தொகை 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு ஹெக்டேருக்காக இதுவரை வழங்கப்பட்ட உர மானியம் தற்போது 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.