• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பெரும் துயரம்! இளம் தவில் கலைஞர் மரணம்

Juni 25, 2026

யாழில் இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

குறித்த கலைஞர் நேற்றையதினம் புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.

அதன்பின்னர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.