• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி – இருவர் காயம்

Juli 2, 2026

பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.