• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் – நீர்வேலிப் பகுதியில் கைது செய்யப்பட்ட மூவர்

Juli 26, 2026

யாழ்ப்பாணம் – நீர்வேலிப் பகுதியில் போதைபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்றுமுன்தினம் (24) இரவு குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.