• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீதியைக் கடக்க முயன்ற பெண் ; பறிபோன உயிர்

Aug. 2, 2026

எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய பாணந்துறை – மொறட்டுவை வீதியின் எகொடஉயன சந்திக்கு அருகில், மொறட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மொறட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் (வயது 75) ஆவார்.

இவ்வாகன விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.