• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

Aug. 11, 2026

  இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சு

ற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இந்த மாதத்தின் முதல் 06 நாட்கள் வரை மொத்தமாக 1,386,228 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

அத்துடன், அவர்களுள் இந்தியாவிலிருந்து 346,057 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.