• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். நிலாவரையில் 2 வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Nov. 20, 2026

யாழ்ப்பாணத்தில் லொறி ஒன்றும் பழங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து சற்றுமுன்னர் (20.11.2026) யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.