• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மூவர் உயிரிழப்பு

Nov. 14, 2024

இலங்கையில்  10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்று இடம்பெறும் நிலையில்      தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த மூவரும் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி யாழ்ப்பாணம்  கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறிலங்காவின் 10 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று !

அத்துடன் , கெஸ்பேவ பொலிஸ் பிரிவிலுள்ள சிறி சதஹம் பிக்கு மடத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியாக பரிந்துரைக்கப்பட்ட பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.