• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஈரான் ஒருபோதும் சரணடையாது…கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம்

Juni 18, 2025

ஈரானையும், அதன் மக்களையும் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல எனவும் அயதுல்லா அலி கொமெய்னி குறிப்பிட்டுள்ளார்.

விசேட தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் அதிகரித்துள்ள நிலையில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இனி யூதர்களுக்கு இரக்கம் காட்ட முடியாது, அந்த தீவிரவாத பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை”என்று தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஏற்கெனவே இந்த எச்சரிக்கையை ஆங்கிலம் மற்றும் பார்ஸி மொழியில் வெளியிட்ட ஈரானின் உச்ச தலைவர் தற்போது அதனை ஹீப்ரூ மொழியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

ஈரான் ஒருபோதும் சரணடையாது...கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் | No Room For Mercy Al Khomeini Warns

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவருக்கு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே அவர் பதிலுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.