தன வரவு என்பது நாம் நினைக்கும் பொழுது நமக்கு கிடைக்காது. அது நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நிச்சயம் வேண்டும்.
அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெறுவதற்கு உகந்த கிழமையாக தான் வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதிலும் குறிப்பாக மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரை என்பது பலவிதமான அற்புதப் பலன்களை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அந்த நேரத்தில் எந்த முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் தன வரவு அதிகரிக்கும்
தன வரவை அதிகரிக்கும் பரிகாரம் ஒருவருடைய வாழ்க்கையில் தன வரவு என்பது அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் அவருக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து கொண்டே செல்லும் என்பதால் நாம் தனவரவை அதிகரிப்பதற்குரிய முயற்சிகளை செய்ய வேண்டும். அந்த முயற்சிகள் வெற்றியடைவதற்கு மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்துவிட்டால் தன வரவிற்கு எந்தவித குறையுமே இருக்காது என்று கூட கூறலாம்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு குங்குமப்பூ வேண்டும்.
ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் ஒரே ஒரு குங்குமப்பூவை மட்டும் போட்டு அதை மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். பிறகு மகாலட்சுமி தாயார் முன்பாக அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகாலட்சுமி தாயாரின் மந்திரம் தெரியும் பட்சத்தில் அந்த மந்திரத்தை கூறலாம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமி அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். இவ்வாறு செய்துவிட்டு தன வரவு அதிகரிக்க வேண்டும் என்று முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த தீபம் ஒரு மணி நேரம் சரியாக சுக்கிர ஹோரையான ஒரு மணியிலிருந்து 2 மணி வரை கண்டிப்பான முறையில் ஒரு மணி நேரம் எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து விளக்கை குளிர வைத்துவிட்டு மகாலட்சுமி தயாரிக்கும் முன்பாக குங்குமப்பூ தண்ணீர் வைத்திருந்தோம் அல்லவா? அதை எடுத்து பருக வேண்டும். யாருக்கு அதிக அளவில் கடன் சுமை இருக்கிறதோ? அவர்களை பருகச் சொல்வதன் மூலம் அவர்களுக்கு விரைவிலேயே கடன் பிரச்சினை தீருவதற்குரிய பண வரவு உண்டாகும்.
மிகவும் எளிமையான இந்த மகாலட்சுமி வழிபாட்டை முழுமனதோடு வெள்ளிக்கிழமை தோறும் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீர்வதற்குரிய தன வரவு உண்டாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை
