• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Juli 19, 2025

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (18) கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பெண்ணிடம் போலி கடவுச்சீட்டு, போலி ஏறும்தாள் (boarding pass) மற்றும் போலி குடிவரவு முத்திரை (immigration stamp) ஆகியன இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த இந்த இளம்பெண், துபாயை வழியாக இத்தாலி பயணிக்க திட்டமிட்டு, போலி ஆவணங்களை பயன்படுத்தி குடிவரவு அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.