• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று வரலட்சுமி விரதம் ; வாழ்வில் வளம் பெற மகாலட்சுமியை வழிபடுங்கள்

Aug. 8, 2025

இன்றையதினம் (8) வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வரலட்சுமி விரதம்

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாள்தான் வரலட்சுமி விரத நாள். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை நீங்கும்,

திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 நோன்பு கயிறு

கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டால் கணவன்-மனையிடைலான மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

 நோன்பு கயிறு

கணவரின் நீண்ட ஆயுளுக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை மேற்கொண்டு, மகாலட்சுமியை வழிபட்டால் கணவன்-மனையிடைலான மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நெருக்கம் அதிகரிக்கும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வார்கள்

பொதுவாக, ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கைலும் நோன்பு கயிறு கட்டிக்கொள்ளவேண்டும் என்பதே வழக்கம்.

ஆனாலும் வரலட்சுமி பூஜை மற்றும் விரத பூஜையில் பங்கேற்கும் பெண்கள் தங்களின் வலது கையில் நோன்பு கயிறை கட்டிக்கொள்ளவேண்டும் என்கிறது சாஸ்திரம்

வீட்டில் மஹாலட்சுமிக்கு வெற்றிலை பாக்கு, 2 வாழைப்பழம் வைத்தும் வழிபடலாம் .

சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடலாம். இன்றைய நல்ல நாளில் மகாலட்சுமி வழிபட்டு வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று இன்புற்று இருப்போமாக.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.