• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Aug. 13, 2025

தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி (Achchuveli) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜலிங்கம் சுபாஷினி எனும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று 12 காலை செல்வச்சன்னதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை தெரிவிக்கின்றார்.

தொண்டைமானாறு செல்வச்சன்னதி ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்தன.

இந்நிலையில், அவரது தந்தையார் தனது மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.