• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் போதைப்பொருளுடன் பிடிபட்ட யுவதி

Aug. 31, 2025

யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதி உள்ளிட்ட மூவரை கைது விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்களின் உடைமையில் இருந்து 09 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.