• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் அசாதாரண நிலை ; நவக்கிரிப் பகுதியில் அழிந்த வாழை மரங்கள்

Sep. 12, 2025

யாழில் நேற்று நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

நேற்று திடீரென யாழ்ப்பாணத்தின் கனமழை பெய்தது. கனமழையுடன் பலத்த காற்றும் யாழை சுழற்றியடித்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன் இடிமின்னலும் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பலத்த காற்றுடனான கனமழையால் யாழின் பல பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யாழ்.நவக்கிரிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 52 வாழை மரங்களும் அடியோடு அழிவடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் திடிரென உருவான அசாதாரண நிலை ; அடியோடு அழிந்த வாழை மரங்கள் | Climate Change In Jaffna Banana Trees Destroyed
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.