• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர் கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த குடும்பஸ்தர்

Okt. 11, 2025

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் (10) உயிர்மாய்த்துள்ளார். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.