யாழ்ப்பாணம் நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை நோக்கி சென்ற யாழ்தேவி தொடருந்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இறப்பு சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
