குடாஓயா பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற பூசாரி ஒருவர் குடாஓயா பொலிஸாரால் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரான பூசாரியிடமிருந்து திருட்டு நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
