• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது

Nov. 23, 2025

05 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ந்தேக நபர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவருடன், அவர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.