யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 09 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் ஆதன உரிமையாளர்களிற்கு 72ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது.
