• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரேசிலில் சரிந்து விழுந்த நூற்றாணடு கால சுதந்திர தேவி சிலை 

Dez. 16, 2025

பிரேசிலின், குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நேரப்படி பிற்பகல் 3மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ‚ஹவன்‘ சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்தது.

சிலை சரிந்த விழுந்த சம்பவம் , உள்ளூர் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்த சுதந்திர தேவி 1900 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலர் சிலை இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.