• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

Dez. 30, 2025

ரண்டு நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் வசிக்கும் இளைஞர் கடலில் காணாமல் போன நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இவரை தேடும் பணி இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் அதே பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஆவார்.

சடலத்தை மருதங்கேணி பொலிஸார் மீட்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் கடலில் காணாமல் போன இளைஞன் –

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.