• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெனிசுலா ஜனாதிபதி கைது : ட்ரம்பிற்கு கிளம்பும் எதிர்ப்பு

Jan. 4, 2026

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்கா நியுயோர்க் சிறையில் அடைத்துள்ளது.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு நியுயோர்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தான் ட்ரம்ப் உடன் நேரடியாக தொடர்புகொண்டு பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார். அவர் கூறியதாவது,

 

ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.

இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியுயோர்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் நேரடியாகப் பாதிக்கும்.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் “ என்று தெரிவித்தார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.