• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அவுஸ்திரேலியாவின் வெள்ளம் – கடலுக்கு அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்!

Jan. 16, 2026

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சில மணித்தியாலங்களுக்குள் சுமார் 169 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் மழையினாலேயே குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தநிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு பொலிஸாரும் அவசர சேவைப் பிரிவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.