• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகளில் மாற்றம்

März 11, 2026

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என  சிறிலங்கா சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என சிறிலங்கா உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வளைகுடா போர் பதற்றத்தால் உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், சிறிலங்காவில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.