• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் புத்தூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண் சடலம்

Apr. 19, 2026

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.