• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரிழந்த 4 மாத ஆண் குழந்தை

Mai 25, 2026

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

வரணி – இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை கடந்த (23) ஆம் திகதி சுவாசிப்பதற்கு சிரமப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.