• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறிலங்காவில் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு 

Juni 26, 2026

சிறிலங்காவில்   இன்று தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று  24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4000 ரூபாயால் குறைக்கப்பட்டு 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3600 ரூபாயால் குறைக்கப்பட்டு, 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.