• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கைதடி பகுதியில் இன்று கோர விபத்து! இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

Okt. 13, 2026

 யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (13) நண்பகல்  இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.