• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Nov. 24, 2026

இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது இன்று (24.11.2026) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம், புவி மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் (17.78S அகலாங்கு மற்றும் 65.82E நெட்டாங்கு) பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் மாலை 5.10 க்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்படும் மேலதிக அறிவிப்புகள் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், புதிய தகவல்கள் மக்களுக்கு உடனுக்குடன் அறிவிக்கப்படும் எனவும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.