அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் டின் மீன்களின் விலை…
ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் ! ஒரு சிசு மரணம் ;
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் நேற்றையதினம் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று(18) உயிரிழந்துள்ளது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் இந்த மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை…
யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்றவர் சடலமாக மீட்பு
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன்(வயது- 63) என்பவராவார். வீட்டில் இரவு படுக்கையில் இருந்தவரை காலையில் காணாத நிலையில்…
இலங்கையில் பிறந்த ஆறு இரட்டைக் குழந்தைகள் !
இந்நாட்டில் மேலும் ஆறு இரட்டைக் குழந்தைகள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார். ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக…
இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.…
இலங்கையின் நிலப்பரப்பில் ஏற்படவுள்ள மாற்றம்!
கடல் மட்டம் அதிகரிப்பினால் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டயர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பையும் இலங்கை இழக்கும் என சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவரும் ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான பி.ஜி. ஹேமந்த…
யாழில் தொடருந்தில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு !
தொடருந்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து…
5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை!
5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு வீசா கட்டணம் விலக்களிக்கப்படவுள்ளதாக சுற்றுலா…
யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் உயிரிழப்பு
யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரச்சம்பவம்…
புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த…
புத்தூர் பகுதியில் தென்னை மரத்தில் இருந்த விழுந்த 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந் நபர் கடந்த 6ஆம் திகதி தென்னை…