• Do.. Mai 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • யாழ் நெல்லியடிப் பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி

யாழ் நெல்லியடிப் பகுதியில் கோர விபத்து!! இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் இன்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும், வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அதிகாலை…

யாழ்.மானிப்பாயில் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்…

யாழில்  வெளிநாடு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி

ஆவரங்கால் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்த நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி விட்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கிளிநொச்சி செல்வநகர் பகுதியை சேர்ந்த முருகையா விஜிராஜ் என்ற நபர் ஆவரங்கால்…

சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில்…

மாங்குளம் ஏ9 வீதியில் கொடூர விபத்து!! 3 பேர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வேன் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில்…

யாழில். நிலவும் அதிக வெப்பத்தினால் 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட நபரை , வீட்டார் மீட்டு , பருத்தித்துறை ஆதார…

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

ஒன்லைன் முறை மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுவான சேவையின்…

கடும் வறட்சியால் 4 மாகாணங்கள் பாதிப்பு; யாழில் அதிகம்!

நாட்டில் நிலவும் அதிக வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.…

யாழ் ஆனைப்பந்தியில் விபத்தில் சிக்கி மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம் திகதி ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும்…

யாழ்ப்பாணத்துக்குள் வெளிநாட்டு தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளையர்கள் !

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் அடையாள…

தளர்த்தப்படும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்

மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed