கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு
பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 18 வயதுடைய இளைஞனும் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன. கண்டாவளை பகுதியில் இருந்து புளியம்பொக்கணை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை…
இலங்கையில் சில பிரதேசங்களில் பனிமூட்டம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் அடிக்கடி ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினித்தேனை, கடவல, வட்டவளை – ஹட்டன்…
யாழ் நல்லூரில் விபத்து!படுகாயம்
யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற முத்திரைச் சந்தியில் இன்று(08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்றிருந்த…
இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி; மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி…
வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்
ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும்,…
மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை
நாரஹேன்பிட்டி இரத்த வங்கிக்கு அருகில் உள்ள பொது சுகாதார கட்டடத் தொகுதியின் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையினால், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு முதல், குறித்த கட்டடத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்ட நிலையில், இன்று…
துப்பாக்கியால் தாமதமடைந்த விமானம்
கட்டுநாயக்காவில் இருந்து இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் துப்பாக்கியால் தாமதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்காவில் இருந்து நேற்று பிற்பகல் இந்தியாவில் சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர், தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு…
நீராடச் சென்றதில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக் ஓயாவில் நேற்று (06) நீராடச் சென்ற போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
6 இலங்கை தமிழர்கள் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து…
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க இந்திய உதவி
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்…
அரியாலையில் விபத்து : கணவன் உயிரிழப்பு, மனைவி படுகாயம்
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை (05) ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் பூம்புகார் பகுதியை…