• Mi.. Mai 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

செய்திகள்

  • Startseite
  • வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய மனநோயாளியால் ஒருவர் அடித்துக் கொலை

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய மனநோயாளியால் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளியொருவரின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் சந்தி பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்த ஒருவரே இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

வெளிநாடு செல்ல முயற்சித்த நால்வர் கைது

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டவர்களாவர். 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் என நால்வர் உள்ளடங்குவதாக…

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (11) குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு வந்து தமது விண்ணப்பங்களை…

யாழில் தாடியினால் வாகனம் இழுத்து சாகசம் புரிந்த முதியவர்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்து சாகசம் நிகழ்த்தியுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்ற நபரே இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார். நேற்று பிற்பகல்…

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்தார் இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் காவல்துறை துப்பாக்கிசூடு

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவற்காக…

நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந் மாணவன் நேற்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழில் காரில் சென்றவரை மறித்து வாள் வெட்டு!! இருவர் கைது!!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளான…

5 நாட்களில் விபத்துகளில் 25 பேர் பலி!

நாட்டின் பல பிரதேசங்களிலும் கடந்த 5 நாட்களில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பண்டிகைக்…

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் பலி!

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(08) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed