நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

அத்துடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவத்தை மேற்கொண்டவர்கள் யார் என இதுவரை தெரியவரவில்லை.

இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Von Admin