• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வங்கிகளில் வட்டி வீதங்கள் தொடர்பில் மகிழ்வான செய்தி!

Feb 19, 2024

இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாக குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வட்டி குறைப்பானது கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25.35%ஆக இருந்த, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதம் (AWPR) தற்போது 11.61% ஆக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளின் முதன்மை கடன் வட்டி வீதம்

மக்கள் வங்கி கடந்த வாரத்தில் ஏனைய வணிக வங்கிகளை விட முதன்மை கடன் வட்டி வீதத்தை 10.87 ஆக குறைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, ஹட்டன் நெஷனல் வங்கி (11.47%), கொமர்ஷல் வங்கி (11.59%), யூனியன் வங்கி (11.55%), ஃபேன் ஏசியா வங்கி (11.85%), நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (11.74%), NDB வங்கி (11.94%) மற்றும் அமானா வங்கி (11.10%) ஆகியவை சராசரி முதன்மை கடன் வட்டி வீதத்தை 12%க்கும் குறைவாகப் பராமரித்த உள்நாட்டு வணிக வங்கிகள் எனவும் தெரியவருகிறது. 

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed