வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய புயல் சின்னம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தம் நேற்று (26) நள்ளிரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
