2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த விண்ணப்பங்களை நேற்று (03) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களும் தத்தமது பாடசாலை அதிபர்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
