• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Juli 4, 2026

நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, மத்திய, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் இவ்வாறான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! | Department Of Meteorology Srilanka Warning
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.