• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 பேர் உயிரிழப்பு!

Nov. 17, 2025

சவுதிஅரேபியாவில் டீசல் கொள்கலன் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

Powered by

மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து விட்டதாகவும் உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவுதி அரேபிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.