• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவர்

Nov. 21, 2025

யாழ்ப்பாணத்தில் வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்று(21.11) காலை உயிரிழந்துள்ளார்.

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவர் கனடாவில் தற்கொலை!

கைதடி மத்தி, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் விக்கினேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 18ஆம் திகதி வயிறு வீக்கத்துடன் வயிற்று வலியும், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 19ஆம் திகதி அதிகாலை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.