• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.புத்தூர் பகுதியில் கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் பலி

Dez. 22, 2025

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் அதிகரிக்கும் மரண தண்டனை 

கடல்நீரேரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மீன் முடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார்.

அதனை அவதானித்தவர்கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்தின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.