முருகன் மந்திரங்களை எப்போது சொன்னாலும் பலன் உண்டு என்றாலும் சில குறிப்பிட்ட நாட்களில் அந்த மந்திரங்களை சொல்லி, மனதார வழிபடும் போது அதனால் கிடைக்கும் பலன்கள் பல மடங்காக அதிகரிக்கும். அப்படி, தைப்பூசம் அன்று முருகனுக்குரிய சக்தி வாய்ந்த ஐந்து மந்திரங்களை மட்டும் சொல்லி வழிபட்டால் வாழ்க்கையில் தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும்.
தைப்பூசம் என்பது முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கான நாளாகும். தீமைகளை அழித்து, நன்மையை நிலை நாட்டுவதற்காக முருகப் பெருமான், வேல் வாங்கிய தினமாக தைப்பூச திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மிக கடுமையான பிரச்சனைகளில் சிக்கி இருப்பவர்கள், தீராத கடன் தொல்லையில் இருப்பவர்கள், வாழ்க்கையில் நெருக்கடிகள், மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தைப்பூச திருநாள் அன்று முருகப் பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த ஐந்து மந்திரங்களை மட்டும் சொல்லி, மனதார முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். இந்த ஐந்து மந்திரங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவை, மிகவும் சக்தி வாய்ந்த நாளான தைப்பூசம் அன்று இந்த மந்திரங்களை சொல்லுவதால் மிகுந்த பலன் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கு இந்த மந்திரங்கள் உதவும்.
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2026, கனடா)
- பிரான்ஸில் கோர விபத்து – 18 வயது தமிழ் மாணவி உயிரிழப்பு!
- உலகளாவிய ரீதியில் முடங்கிய டிக்டொக்
- இந்து சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
- சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு
