• Do.. Nov. 26th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை – வளிமண்டலவியல் திணைக்களம்!

März 13, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மின்னல் தாக்கம் தொடர்பில் 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதுடன், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.